“உடைந்த பாட்டில்கள்.. பதறிய பெண்கள்”…. தவெக பொதுக்கூட்டத்தில் நடந்த அந்த ஒரு நிமிடம்…. போலீஸார் சொன்ன ஷாக் நியூஸ்…!

Spread the love

சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா, நேற்று இரவு அயனாவரம் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பெண் தொண்டர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் உடைந்த மதுபாட்டில்கள் மற்றும் கண்ணாடித் துண்டுகள் வந்து விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்ததால், கூட்டத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

இந்தச் சம்பவத்தைக் கண்டு ஆவேசமடைந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, மேடையிலேயே தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். “பெண்கள் இருக்கும் இடத்தில் கண்ணாடி பாட்டில்களை வீசுவதுதான் ஜனநாயகமா? இந்த அராஜகத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

பாட்டில் வீசப்பட்ட திசையை வைத்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த ஒரு தனியார் தங்கும் விடுதியிலிருந்து (லாட்ஜ்) பாட்டில்கள் வீசப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த விடுதிக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த இரண்டு நபர்களைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த போலீஸார், “குறிப்பிட்ட அந்த லாட்ஜில் தங்கியிருந்த இருவர் மதுபோதையில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள மதுபாட்டில்களை வீசியபோது, அது தவறுதலாக ஜன்னல் வழியாக வெளியேறி பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் விழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது போதையில் நடந்த விபத்தா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

5 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

5 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

5 மணத்தியாலங்கள் ago