“உள்ளே வரும் பாமக?…. திருமாவை முதலில் சமாதானம் படுத்துங்க”…. விஜய்யின் அடுத்த மெகா மூவ்…. அமைச்சர்கள் கொடுத்த அந்த ஒரு ஐடியா….!

Spread the love

தமிழத்தில் தவெக தலைமையிலான அரசு தற்பொழுது பெரும்பான்மை சிக்கலை எதிர்நோக்கியுள்ள நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பலத்தை 109 ஆக உயர்த்தியுள்ள போதிலும், தனிப்பெரும்பான்மை இல்லாத சூழல் தொடர்கிறது. இதற்கிடையில், இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த போதிலும் பாமக வேட்பாளர்களை ஆதரிக்காமல் மறைமுகமாக தவெக-விற்கு களம் அமைத்துக் கொடுத்தது அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வட தமிழகத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்தவும், ஆட்சியை நிலையாகத் தொடரவும் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர தவெக மூத்த தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கடந்த கால மோதல்களைக் காரணம் காட்டி பாமகவுடன் ஒரே அணியில் இணைய விசிக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாமக உள்ளே வந்தால் தவெக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.

மறுபுறம், விசிக வெளியேறினாலும் பாமகவின் பலத்தைக் கொண்டு சமாளிக்கலாம் என்று தவெக-வின் சில அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். தற்போதைய அரசியல் சூழலில், கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கும், பாமகவின் வருகையும் தவெக அரசுக்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. விசிகவின் மிரட்டல் மற்றும் பாமகவின் ஆதரவு ஆகிய இரண்டு கட்டங்களுக்கு இடையில் சிக்கியுள்ள முதல்வர் விஜய், இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான இறுதி முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…

1 minute ago

ஜோதிடர் கணிப்பு… ஸ்டாலின் குடும்பத்தில் வெடித்த பூசல்… உதயநிதி கையில் கட்சிப் பொறுப்பா?… துர்கா ஸ்டாலின் போட்ட கண்டிஷன்…..!

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…

14 minutes ago

திமுகவில் விழுந்த பெரும் அடி…. 35 ஆண்டு கால பவள விழா நிர்வாகி திடீர் ராஜினாமா…. கலக்கத்தில் அறிவாலயம்….. அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…

20 minutes ago

BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

34 minutes ago

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

44 minutes ago

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி…. டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா?…. உங்க அக்கவுண்ட் சேஃபா?… திடுக்கிடும் தகவல்….!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…

56 minutes ago