தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களைக் கவர பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்தில் திமுக – தவெக இடையே காரசாரமான மோதலை உருவாக்கியுள்ளது. தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூர்பாளையம் பூத் எண் 30-ல் தவெக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி சேலை மற்றும் காமாட்சி விளக்கு வழங்கப்பட்டதாகவும், பிரியாணி விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “தூய சக்தியின் தூய அரசியல்” எனக் கிண்டல் செய்து புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
செந்தில் பாலாஜியின் இந்த குற்றச்சாட்டுக்குத் தவெக நிர்வாகி அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஊழல் இருளில் உழல்வோர் ஒளியைப் பழிப்பதா? தோல்வி பயத்தால் தத்தளிக்கும் செந்தில் பாலாஜி வீசியுள்ள அபாண்டமான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறோம். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே ஜனநாயகத்தைப் பணச்சலங்கையிட்டு ஆடவிட்டு, வாக்காளர்களைப் பட்டியில் அடைத்து வாக்கு வேட்டையாடிய பிதாமகர்கள் திமுகவினர் மட்டுமே. அவர்கள் காலங்காலமாகச் செய்யும் தகிடுதத்தங்களை எங்கள் மீது திணிப்பது, இருள் ஒளியைப் பார்த்துப் பழிப்பதற்குச் சமம்” என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
மேலும் அருண்ராஜ் தனது பதிவில், எளிய மக்களின் தூய அன்பை மட்டுமே நம்பி நிற்கும் தவெகவுக்கு குறுக்கு வழிகளில் பயணிக்கும் இயல்பு எக்காலத்திலும் கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “காசை வீசி வாக்குகளைப் பறிக்கும் கறைபடிந்த அரசியல் எங்கள் மரபல்ல; அறமே வடிவான எங்கள் தலைவரின் அகராதியிலேயே அதற்கு இடமில்லை” எனக் குறிப்பிட்டுள்ள அவர், திமுகவினர் வெளியிட்ட புகைப்படம் வஞ்சகத்தால் புனையப்பட்ட அப்பட்டமான பொய் என்றும், மக்கள் காட்டும் தன்னெழுச்சியான அன்பைப் சகித்துக் கொள்ள முடியாமலே திமுகவினர் இத்தகைய பழிகளைச் சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.
இறுதியாக, பொய் அவதூறுகளை பரப்பி தப்பிவிடலாம் என நினைக்கும் செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினர் மீது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உறுதியான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் ஜனநாயகத்தை ஏலம் கேட்கத் துடிக்கும் எத்தர்களுக்கு, தாராபுரம் தொகுதி மக்கள் தங்களது விரல் மையினால் வாக்குப்பதிவு நாளன்று தகுந்த தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் அருண்ராஜ் தனது பதிவில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…