“தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?… பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் தவெக தலைவர் விஜய்… டெல்லியில் நடப்பது என்ன?… பரபரக்கும் தமிழக அரசியல்”…!!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் பெற்றுள்ள நிலையில், தவெக தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது. இதில் 5 எம்எல்ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தவெக-விற்கு முதல் ஆளாக நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளதோடு, வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது.

காங்கிரஸின் ஆதரவையும் சேர்த்து 113 எம்எல்ஏ-க்களின் பலத்துடன் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், 118 என்ற மேஜிக் எண்ணை எட்டினால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த இழுபறி காரணமாக, கடந்த சில நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த முதலமைச்சருக்கான ‘கான்வாய்’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தவெக தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தவெக-விற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது மட்டுமே.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நாளை அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளன. தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படும். அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெக-விற்கு ஆதரவு அளிக்க விரும்பவில்லை என்ற தகவல்கள் கசிகின்றன. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, தவெக-வுடன் கைகோர்ப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது என அவர்கள் கருதுகின்றனர். இதனால் விஜய்யின் ஆட்சி அமைக்கும் கனவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

மற்றொரு வாய்ப்பாக, அதிமுக-வின் ஆதரவைப் பெற தவெக முயற்சி செய்யலாம். ஆனால், அதிமுக எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தவிர்க்க அவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க நாளை கடைசி நாள் என்பதால், தவெக-வால் அது முடியாமல் போகும்பட்சத்தில் ஆளுநர் திமுக-வை அழைக்க வாய்ப்புள்ளது. ஆனால், திமுக ஆட்சி அமைக்கத் தயக்கம் காட்டி வருவதால், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத முட்டுக்கட்டை நிலை ஏற்படும் சூழல் உள்ளது. இதன் இறுதி விளைவாக, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

Muthu Mani

Recent Posts

அட கொடுமையே… சுதந்திர தின நாளில் இப்படியா?… புர்கா அணிந்து மாணவிகள் செய்த காரியம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்… உ.பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…

16 minutes ago

அறிவாலயத்துக்குப் பறந்த ரகசிய புகார்…. தவெக-வுக்கு முட்டுக் கொடுக்கும் திமுக ‘இனிஷியல் லு’ அமைச்சர்?…. சட்டமன்றத்தில் அரங்கேறும் திடீர் திருப்பம்…..!

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…

32 minutes ago

“தம்பி பக்கத்துல வா”…. ஓடும் பைக்கில் தொடையில் கை வைத்து Rapido டிரைவர் செய்த அத்துமீறல்…. வீடியோவை வெளியிட்ட 17 வயது சிறுவன்…..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், ராபிடோ பைக் டாக்ஸியில் பயணித்தபோது, அந்த ஓட்டுநர் அவரிடம் பாலியல் ரீதியாக…

41 minutes ago

நள்ளிரவில் அகோரி சடங்கு….. ஆடையின்றி  நிர்வாணமாக 15 வயது சிறுமி…. அடுத்து நடந்த பதறவைக்கும் சம்பவம்…. அம்பலமான திடுக்கிடும் உண்மை….!

மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டம் உத்கிர் பகுதியில், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையின் பெயரில் 15 வயது சிறுமிக்கு இழைக்கப்படவிருந்த பயங்கரம் நல்வேளையாகத்…

53 minutes ago

முதல்வர் உள்ளே நுழைந்தால் எம்.எல்.ஏ-க்கள் கண்டிப்பாக எழ வேண்டுமா?… தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி கூறுவது இதுதான்….

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் மரியாதை நிமித்தமான பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவது இயல்பான ஒன்று. சமீபத்தில் தமிழகச்…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: “அடுத்து பெரிய சம்பவம் இருக்கு”…. அன்புமணி உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு….. சற்றுமுன் அரசியலில் புதிய புயல்….!

தமிழகத்தில் 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான…

1 மணத்தியாலம் ago