தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால், தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளையோ அல்லது தொகுதிகளையோ வெல்ல வேண்டும். தவெக இதுவரை எந்தத் தேர்தலையும் சந்திக்காத நிலையில், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தங்களுக்கு ஒரு பொதுவான சின்னத்தை ஒதுக்குமாறு அக்கட்சி சார்பில் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்த புதிய அப்டேட் டெல்லியிலிருந்து வெளியாகியுள்ளது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968-இன் கீழ் தவெக அளித்த விண்ணப்பம் தற்போது தேர்தல் ஆணையத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளது. ஒரு கட்சி பொதுச் சின்னம் பெற கடந்த நிதியாண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியின்படி, 2024-25 நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கைகளைத் தவெக முறையாகத் தாக்கல் செய்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக தவெக-விற்கு ஒரு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்குத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குச் சற்று முன்னதாகவே சின்னங்கள் ஒதுக்கப்படுவது நடைமுறை. அந்த வகையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்தச் சின்னம் ஒதுக்கப்படும் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சின்னம் கிடைத்தவுடன், அக்கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி டெல்லியில் நகரும் இந்த நிர்வாக நடவடிக்கைகள், அக்கட்சியின் தேர்தல் களப்பணிகளுக்கு முக்கிய அடித்தளமாக அமையப்போகிறது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…