“எதிர் ரோட்டில் நின்று பேசிய உதயநிதி”…. மதுராந்தகத்தில் பரபரப்பு… தவெகவை வெளுத்து வாங்கிய பரந்தாமன்….!

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு உரிய போக்குவரத்து ஏற்பாடுகளையும் காவல்துறை பாதுகாப்பையும் செய்யாமல், தவெக அரசு மலிவான அரசியல் செய்வதாக திமுக வேட்பாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக வேட்பாளர் பரந்தாமன், “எதிர்க்கட்சித் தலைவர் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க வரும்போது, அவருக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளைச் செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும். ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் முறையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இல்லாததால் வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. நாங்கள் முன்கூட்டியே வழிகாட்டல் வரைபடம் (Route Map) கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவரால் குறித்த இடத்திற்கு வர முடியாமல், வேறு வழியின்றி எதிர் சாலையில் நின்று பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது” எனக் கூறினார்.

மேலும் தவெக அரசின் செயல்பாட்டைக் கடுமையாகச் சாடிய அவர், “உங்கள் கட்சித் தலைவர் வரும்போது ஆளே இல்லாத டீ கடையில் கூட ஆயிரம் போலீஸாரை நிறுத்தும் காவல்துறை, எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணாமல் போயுள்ளது. நபர்களை விட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது. இடைத்தேர்தல் காலத்தில் மாவட்ட நிர்வாகமே முழுப் பொறுப்பு என்பதால், திமுக மீது அவப்பெயர் ஏற்படுத்தவே தவெக அரசு இவ்வாறு திட்டமிட்டுச் செய்துள்ளது. வருகிற 3-ஆம் தேதி எங்கள் கட்சித் தலைவர் பிரச்சாரத்திற்கு வரவுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரியும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, மதுராந்தகம் பகுதியில் நிலவும் சாலைப் போக்குவரத்துப் பிரச்சினைகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் சாலையைக் கடக்கப் பெரிதும் சிரமப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தன் ஆதரவாளர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வேதனையுடன் தெரிவித்தார். எனவே, காலை மற்றும் இரவு நேரப் போக்குவரத்து நெரிசல் வேளையில் காவல்துறையினர் உடனடியாகப் போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என்றும், தான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அரசு மூலம் இதற்கென நிலையான தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

Nanthini

Recent Posts

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

1 minute ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

8 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

16 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

31 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

41 minutes ago