திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது பெரும் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட்கள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தெரு தெருவாகவும், வீடு வீடாகவும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. எல்லிஸ் நினைவாலய கிறிஸ்துவ ஆலயத்தின் முன்பு திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை முடிந்து வெளியே வரும் மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக, திமுக தேர்தல் தொகுதி பொறுப்பாளர் கே.என்.நேரு மற்றும் மாவட்டச் செயலாளர் பத்மநாபன் தலைமையில் திமுகவினர் ஆலயத்தின் ஒரு பகுதியில் காத்திருந்தனர். அதே நேரத்தில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், பர்வேஸ் ஆகியோர் தலைமையில் தவெகவினரும் ஆலயத்தின் மறுபுறம் நின்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். எதிரெதிரே நின்றிருந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்து நலம் விசாரித்துக் கொண்டது ஆரோக்கியமான அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தியது.
எனினும், பிரசாரத்தின் போது தவெக தொண்டர்கள் ‘தவெக… தவெக…’ என்றும், திமுக தொண்டர்கள் ‘திமுக… திமுக…’ என்றும் போட்டி போட்டுக்கொண்டு முழக்கமிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தேவாலய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தொண்டர்கள் அமைதியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து இரு கட்சியினரையும் தனித்தனியாகப் பிரித்து நிற்க வைத்தனர்.
தொடர்ந்து, தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த கிறிஸ்துவ மக்களிடம் தவெகவினர் விசில் சின்னத்திற்கும், திமுகவினர் உதயசூரியன் சின்னத்திற்கும் ஆதரவு கேட்டுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதனிடையே, அங்கிருந்த செய்தியாளர்களைப் புகைப்படம் எடுக்கப் போலீசார் தடுத்தபோது, குறுக்கிட்ட திமுக தலைவர் கே.என்.நேரு, “அவர்கள் தங்கள் பணியைச் செய்கிறார்கள், இங்கு அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். எதிரெதிர் துருவங்களாகச் செயல்படும் கட்சிகள் ஒரே இடத்தில் நின்று வாக்கு சேகரித்த இந்தச் சம்பவம் தாராபுரம் தொகுதி மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…