தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைந்த அரசுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உருவாகியுள்ளது. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தங்களுக்கு உரிய அதிகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைக் காங்கிரஸ் மேலிடம் முன்வைக்கிறது. குறிப்பாக, பாஜகவை விஜய் வெளிப்படையாக எதிர்க்கத் தயங்குவதும், தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணிப் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் விலகி நிற்பதும் காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிருப்தியின் உச்சக்கட்டமாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும் டெல்லியில் திமுக முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசுடன் கூட்டணி சேர்ந்தது மிகப்பெரிய ஏமாற்றமாகிவிட்டதாகவும், பழைய கூட்டணியான திமுகவே சிறந்ததாக இருந்ததாகவும் சோனியா காந்தி வெளிப்படையாகத் தனது குமுறலைக் கொட்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இருப்பினும், டெல்லியின் இந்தப் பேச்சுவார்த்தைக்குச் சென்னையில் இருந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எந்தவித ஆர்வமும் காட்டாமல் மௌனம் சாதித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நேரத்தில் தங்களைவிட்டுத் தவெக பக்கம் சென்றுவிட்டு, தற்போது அதிகாரம் கிடைக்காததால் மீண்டும் திமுகவை நாடுவதை ஏற்கத் தயாராக இல்லாத திமுக தலைமை, உடனடியாக எந்த முடிவையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது.
இதனால், தவெக அரசுடன் தொடர்ந்து பயணிப்பதா அல்லது கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து நிற்பதா என்ற இக்கட்டான நிலைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு விவகாரமும், திமுகவின் அலட்சியப் போக்கும் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதோடு, வரும் நாட்களில் ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்தான பலத்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்து 1973-ல் வெளியான புகழ்பெற்ற திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தலின் போது அக்கட்சியின் தலைவர் விஜய்…
கேரளாவில் கணவர் காரை பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…
தமிழக அரசியல் களத்தில் மாற்று சக்தியாகத் தன்னை முன்வைத்து களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ஒரே…
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபட்டின் சிசிடிவி…
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் வேத மந்திரங்கள் முழங்க, இந்து முறைப்படி சடங்குகள் நடைபெற்றதற்கு பாஜக மூத்த தலைவர்…