தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், மாவட்ட செயலாளர் மதியழகன், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இப்படியான சூழலில் விஜய் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டர்களில், “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே” என்ற எம்ஜிஆர் திரைப்பட பாடல் வரிகளுடன் “தலைவன் இருக்கிறான் மயங்காதே I AM STANT WITH ANAND ” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தலைமுறைவாக இருக்கும் பொதுச் செயலாளர் ஆனந்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ளது. அதேசமயம் தன்னாலே வெளிவரும் தயங்காதே I AM STANT WITH VIJAY விஜய் அண்ணா என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு போஸ்டரின் ஒரு மூலையில் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்ற வரி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைமறைவாக இருக்கும் ஆனந்த் மற்றும் விஜய்க்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக போஸ்டர் முழுவதும் வரிகள் நிரம்பியுள்ளதால் தற்போது இந்த போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…