தமிழக அரசியலில் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. ஆளுங்கட்சியான திமுக இரண்டாவது இடத்திற்கும், அதிமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட, 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகம் தன் தலைவர் விஜய் தலைமையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு புதிய ஆட்சியை அமைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, தற்போது தவெக தலைமையிலான புதிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான பணிகள் திரைமறைவில் வேகமெடுத்து வருகின்றன. ஆனால், தொடக்கப்புள்ளியிலேயே கூட்டணிக் கட்சிகளுக்குள் எழுந்துள்ள சில முக்கிய முரண்பாடுகள் தற்போதைக்கு இந்த அறிவிப்பைத் தற்காலிகமாக முடக்கிப் போட்டுள்ளன.
இந்தக் கூட்டணியில் தற்போது பெரும் முட்டுகட்டையாக உருவெடுத்திருப்பது ‘கூட்டணி ஒருங்கிணைப்பாளர்’ பதவிதான். தவெக தலைவர் விஜய், தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைத்த பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை இப்பொறுப்பில் அமர்த்த திட்டமிட்டுள்ளார். ஆனால், நீண்டகால கூட்டணி அரசியல் பின்னணி கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகிய இருவருமே இந்த ஒருங்கிணைப்பாளர் பதவிக்குத் தங்களுக்குள் போட்டி போடுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவர்களின் இந்த அதிகாரப் போட்டி மற்றும் கூட்டணி பெயர் தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் புதிய கூட்டணியின் அதிகாரப்பூர்வ பிரகடனத்தைத் தாமதப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாகவே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான மாணிக்கம் தாகூர், திருமாவளவன் மற்றும் வைகோ ஆகியோர் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் ஒருவரையொருவர் விமர்சித்து வருவது தவெக தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய ஆட்சியில் விசிக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த போதிலும், “நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்” என திருமாவளவன் பேசியிருப்பது முதல்வர் விஜய்யை கடும் அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி இன்னும் முறைப்படி பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, தோழமைக் கட்சிகளுக்குள் வெடித்துள்ள இந்த மோதல் போக்கு தவெக முகாமில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் நடைபெற்ற தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் புதிய கூட்டணிக்கான பெயர் குறித்து விரிவாகப் பேசப்பட்டாலும், இந்த முரண்பாடுகளால் இறுதி முடிவு ஏதுமின்றி கூட்டம் முடிவடைந்தது. இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரசியல் சார்பற்ற அல்லது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நடுநிலையான ஆளுமையை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கலாம் என்ற புதிய யோசனையையும் விஜய் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார். தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியைத் தந்துவிட்ட போதிலும், முரண்பட்ட கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் விஜய் எதிர்கொள்ளும் இந்த முதல் அரசியல் பரீட்சை, தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…