தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலத் தேர்தல் வியூகம் குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், திமுகவைத் தோற்கடிக்க கூட்டணி அவசியம் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தனித்து போட்டியிட்டால் 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று ஒரு தரப்பு கருதியாலும், கள நிலவரத்தை கருத்தில் கொண்டு கூட்டணி அமைப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்தாகப் பதிவாகியுள்ளது.
இந்த ஆலோசனையின்போது, கூட்டணி அமைந்தால் தங்களுக்குத் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்ற சூழலை புஸ்ஸி ஆனந்த் சுட்டிக்காட்டினார். அதற்கு மாவட்ட செயலாளர்கள், “தங்களுக்கு சீட் கிடைப்பதை விட, கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்சியின் தலைவர் விஜயின் வெற்றிதான் முக்கியம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளனர். இருப்பினும், சில நிர்வாகிகள் 50 முதல் 60 தொகுதிகள் மற்றும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி போன்ற நிபந்தனைகளுடன் கூட்டணி அமைப்பது கவுரவமாக இருக்கும் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளனர்.
விஜய் இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நிற்கும் சூழலில் இருக்கும் நிலையில், திமுகவை வீழ்த்த கூட்டணிதான் ஒரே வழி என்ற நிர்வாகிகளின் இந்த அழுத்தம், தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைய வலியுறுத்தி வரும் சூழலில், நிர்வாகிகளின் இந்த விருப்பம் விஜயை எந்த முடிவை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது விரைவில் தெரியவரும்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…