2029-ல் இந்திய பிரதமராகும் விஜய்?…. “60 எம்பிக்கள், 130 இடங்கள் கூட்டணி”… தவெகவின் ரகசிய 2029 மாஸ்டர் பிளான்…. எம்பி சீட் கணிப்பில் ஜோதிடர் வெளியிட்ட குண்டு….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் , வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அக்கட்சியின் தலைவர் விஜய் இந்தியப் பிரதமராக உருவெடுப்பார் என்றும் அக்கட்சியின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவினர் நடத்தி வரும் ‘வெற்றி’ டிவி சேனலின் நிர்வாகி சிங்காரவடிவேலன் அளித்த பேட்டியில், 2029-ல் மத்தியில் அமையவுள்ள ஆட்சியில் தவெக முதன்மையான பங்கு வகிக்கும் என்பதை ஜோதிடக் கணிப்புகள் தெளிவாக சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

தவெக என்பது வெறும் தமிழக எல்லைக்குள் மட்டும் சுருங்கிவிடக்கூடிய கட்சி அல்ல என்றும், தென்னிந்தியா முழுவதும் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்றும் சிங்காரவடிவேலன் சுட்டிக்காட்டினார். முதல்வர் விஜய்க்கு தமிழகத்திற்கு நிகராகக் கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் வாக்கு வங்கியும் உள்ளது. 2028 ஜனவரிக்குப் பிறகு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தவெகவின் கட்டமைப்பு வலுப்பெற்று, வரும் 2029 தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் தவெக உறுதியாக 60 இடங்களைக் கைப்பற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி பேரம் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்த சிக்கல்களைத் தவிர்க்க, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டு தமிழகத்தின் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்பது ஜோதிடர் பண்டிட்ஜியின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது. கூட்டணி அமைத்து குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதை விட, தனித்து நின்று ஒட்டுமொத்த ஆதரவையும் அறுவடை செய்வதே கட்சியின் வளர்ச்சிக்குச் சரியான பாதையாக இருக்கும் என்று அவர் தனது கணிப்புகள் மூலம் விளக்கியுள்ளார்.

மேலும் இந்த ஜோதிடக் கணிப்பின்படி, தெலுங்கானாவில் கவிதாவின் கட்சி 10 இடங்களையும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி 10 இடங்களையும், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் 50 இடங்களையும் கைப்பற்றுவார்கள். இந்த மாநிலக் கட்சிகளுடன் தவெக இணையும் போது மொத்தம் 130 இடங்கள் வரை பலம் உயரும். இந்தத் பிராந்தியக் கட்சிகளின் கூட்டமைப்புக்குத் தலைவராகத் தளபதி விஜய் செயல்படுவார் என்றும், இக்கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் பட்சத்தில் விஜய் இந்திய நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் அந்த பேட்டியில் சிங்காரவடிவேலன் விவரித்துள்ளார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

15 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

21 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

33 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

36 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

46 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

54 minutes ago