வடஇந்திய சின்னத்திரையில் மிகவும் பிரபலமான 22 வயது நடிகையான சஞ்சிதா உகாலே, தன் வீட்டில் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீ டிவியின் புகழ்பெற்ற ‘கும் கும் பாக்யா’, ‘வாக்லே கி துனியா’ போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டவர். இதுதவிர, ஓடிடி தொடர்கள், ‘சைலன்ஸ் 2’, ‘சவ்வா’ போன்ற திரைப்பட ப்ராஜெக்ட்கள் மற்றும் ‘டில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ என்ற இந்தி தொடரில் முதன்மை கதாபாத்திரத்திலும் சஞ்சிதா நடித்துள்ளார்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி, அச்சோலே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் சஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அன்று இரவு 7 முதல் 7.30 மணிக்குள், அவர் தனது அறையைத் தாழிட்டுக்கொண்டு புடவை மூலம் மின்விசிறியில் தூக்கிய மாட்டியதாக காவல் ஆய்வாளர் வினோத் பாக் தெரிவித்துள்ளார். சஞ்சிதாவை மீட்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக வசை விறார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DZhH5LCTdkv/?utm_source=ig_web_button_share_sheet
தகவலறிந்து வந்த காவல்துறையினர் சஞ்சிதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த நடிகையின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது இந்த இறப்பு ஒரு விபத்து என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சிதா உகாலே இப்படியொரு தீவிர முடிவை எடுத்ததற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…