தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியே அமைய வேண்டும்” எனப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற 16-வது சட்டப்பேரவையின் இறுதி அமர்வில் அவர் இவ்வாறு பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., ஐயப்பனின் கருத்து மக்கள் மனநிலையைத் தான் பிரதிபலிக்கிறது என்று கூறி அதற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓ.பி.எஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். “ஜெயலலிதாவால் காலமெல்லாம் வீழ்த்தப்பட்ட தீய சக்தியான திமுகவை மீண்டும் ஆட்சியில் அமரச் சொல்லும் ஐயப்பனின் பேச்சு அதிமுக தொண்டர்களைப் பெரிதும் காயப்படுத்தியுள்ளது” என அவர் சாடியுள்ளார். மேலும், சுயநலத்திற்காக ஓ.பி.எஸ் இதுவரை “பசுந்தோல் போர்த்திய புலியாக” இருந்திருக்கிறார் என்றும், அவரது உண்மை முகம் இப்போது தெரிந்துவிட்டதாகவும் தினகரன் இன்று (பிப். 22) தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…