திடீர் டுவிஸ்ட்..! NDA-வின் தமிழ்நாடு தலைவர் யார் தெரியுமா..? அடுத்த 4 நாட்களுக்குள் முடிவு.. டெல்லிக்கு செல்வது குறித்து உண்மையை உடைத்த டிடிவி தினகரன்..!!

Spread the love

சென்னையில் இன்று (மார்ச் 20) செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது டெல்லி பயணம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பல்வேறு யூகங்களுக்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “நான் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச டெல்லி செல்லவில்லை” என்று குறிப்பிட்ட அவர், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை விடுத்த அழைப்பின் பேரில் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்வதாகத் தெளிவுபடுத்தினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தமிழ்நாட்டின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் செயல்படுகிறார் என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், அடுத்த 4 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவெடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தற்போது நிலவும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எந்தெந்த தொகுதிகள்? மற்றும் எத்தனை தொகுதிகள்? என்பவை குறித்துத் தனக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும் என்றும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, டிடிவி தினகரனும் டெல்லி செல்வது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக 29 தொகுதிகளைக் கோருவதாகத் தகவல் வெளியான நிலையில், தினகரனின் இந்த டெல்லி பயணம் கூட்டணிக் கணக்குகளில் இறுதி வடிவம் கொடுப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணியில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, தேர்தலை வலுவாக எதிர்கொள்ளத் தயாராகி வருவதை தினகரனின் இந்தப் பேட்டி உணர்த்துகிறது.

Soundarya

Recent Posts

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

4 minutes ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

8 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

14 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

20 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

20 minutes ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

28 minutes ago