தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற அமைப்பில் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் முக்கிய முகங்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தலைமை பொறுப்பை இபிஎஸ் ஏற்று கொண்டார். அப்போதிலிருந்தே நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்விகளை மட்டும் தான் சந்தித்தது. இதனால் வருகின்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடிவரும் இபிஎஸ் ஒரு வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டார். சமீபத்தில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்தை டார்கெட் செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களிலும் பாஜக தலையிட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் பாஜகவிடம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் ஆட்சியில் பங்கு என்ற மரபே தமிழகத்தில் இல்லை எனவும் கூறி வந்தார். அதிமுகவின் பிரிவு தேர்தல் சமயத்தில் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த பாஜக அதனை இணைக்க முயற்சித்தும் அது கைகூடவில்லை. இதனால் இதனை சரி செய்ய டெல்லி மேலிடம் ஒரு திட்டம் தீட்டியுள்ளது. அதாவது இபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்புக்கு சம்மதிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக உள்ள டிடிவி, ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை போன்றோரை ஒருங்கிணைத்து தமிழக தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் வேட்பாளரை மாற்றினால் NDA கூட்டணியில் இணைவோம் என்று டிடிவி தினகரன் கூறிய காரணத்தாலும் அண்ணாமலையும் ஓபிஎஸ்யும் எடப்பாடிக்கு எதிராக இருப்பதால் இந்த இணைப்பு சுலபமாக அமையும் என்றும் டெல்லி மேலிடம் எதிர்பார்க்கிறது. மேலும் ஜனவரி இறுதிக்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்குமாறு EPS-க்கு கெடு விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழகம் வந்த அமித்ஷாவை தான் சந்திக்காமல்SP வேலுமணியை அனுப்பி வைத்தாராம் EPS.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…