தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கட்சியில் இணைய மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும் வரை அமமுக அந்தக் கூட்டணியில் இணையாது என்று மீண்டும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பேசிய தினகரன், அமித்சாவை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் வரும் தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட்ட அதிமுக மீண்டும் ஒருங்கிணைக்கப்படும் என்பதை இன்றைய தினம் உறுதி மொழியாக எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சமீபத்தில் குரல் கொடுத்த செங்கோட்டையன் மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் ஒன்றிணைப்பு குறித்து குரல் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…