அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தற்போது கடும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். தான் யாரைத் ‘துரோகி’ என்று விமர்சித்து வந்தாரோ, அதே எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தது ஏற்கனவே அவரது ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடும் தொகுதிகளை டெல்லி பாஜக மேலிடம் பெற்றுத் தரும் என நம்பி அவர் கூட்டணியில் இணைந்தார். ஆனால், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பாஜக தற்போது அந்தப் பொறுப்பை அதிமுகவிடமே தள்ளிவிட்டு கைகழுவி விட்டதாகத் தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பாஜக மற்றும் அதிமுக இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நீடிப்பதால், அதிருப்தியடைந்த தினகரன் டெல்லி மேலிடத்தைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, “எடப்பாடி பழனிசாமியிடமே பேசி தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று பாஜக கைவிரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் “பாஜகவை நம்பி மோசம் போய்விட்டோம்” என்று தினகரன் தரப்பு கடும் வேதனையில் உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் தன் பிடியை மீறிச் சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தான் ஒதுக்கும் தொகுதிகளை மட்டுமே மற்ற கட்சிகள் ஏற்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது அமமுகவைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சூழலால் டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில், கூட்டணியில் நீடிப்பதா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். “பாஜக எப்படித் தினகரனைக் கைவிட்டதோ, அதுபோல் தினகரனும் தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்” என அவரது ஆதரவாளர்களே புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகுதிப் பங்கீடு மோதல் கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…