டெல்லியில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் பயிலும் மூன்று வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில், சிறுவனின் கை மற்றும் முகத்தில் காயங்கள் இருப்பதை கவனித்த பெற்றோர், பின்னர் அவனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள், சிறுவனின் கண்களில் வீக்கம் உள்ளதையும் காதின் செவிப்பறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்தனர்.
இதன் காரணமாக சந்தேகமடைந்த பெற்றோர், பள்ளியின் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்குமாறு நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி பெற்றுப் பார்த்துள்ளனர். அதில், சிறுவனை பல மணிநேரம் நாற்காலியில் கட்டி வைத்து, அங்கிருந்த உதவியாளர் மற்றும் ஆசிரியர் கடுமையாக தாக்கிய நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறார் நீதிச் சட்டம் மற்றும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்தால் உடல்ரீதியாக மட்டுமின்றி, சிறுவன் மனரீதியாகவும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளான். பள்ளிக்குச் செல்லவே பயப்படும் அந்த குழந்தை, தனியாக அறையை விட்டு வெளியே வரவும் மறுத்து அச்சத்திலேயே நாட்களை கழித்து வருகிறான். தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்லத் தெரியாத சிறு குழந்தைகள் செல்லும் பள்ளிகளில், தகுந்த பின்னணி விசாரணை செய்த பின்னரே ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதையும், பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் எச்சரிக்கையாக உணர்த்துகிறது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…
ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…
வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…