அய்யோ… போர் ஒரு பக்கம்… வரி ஒரு பக்கம்… ட்ரம்பின் ‘வரி’ தாக்குதல்… இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?… உலக நாடுகள் அதிர்ச்சி…!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவும் வேளையிலும், கட்டாய உழைப்பு தடுப்பு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி இந்தியா உட்பட 17 நாடுகள் மீது புதிய சுங்க வரிகளை விதித்து அதிரடி காட்டியுள்ளார். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் பிரிவு 301-ன் கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஜூலை 24 முதலே உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைச் சரிசெய்யவே இந்த கூடுதல் வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பின் கீழ் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, கனடா, மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 17 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட நாடுகள் மீது 12.5 சதவீதம் வரை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 60 வர்த்தகப் பங்களிப்பு நாடுகளில், தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை இறுக்கமாகச் செயல்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கத்தில் இந்தியாவுக்கு 12.5 சதவீத வரி விதிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இருநாடுகளுக்கும் இடையே தொழிலாளர் நடைமுறைகள் குறித்து நடைபெற்ற சாதகமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. போர் பதற்றங்களுக்கு நடுவிலும் வர்த்தகக் கொள்கைகளில் உறுதியாக நின்று அமெரிக்கா எடுத்துள்ள இந்த உடனடி வரி உயர்வு முடிவு, இந்தியா உள்ளிட்ட ஏற்றுமதி நாடுகளுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

4 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

14 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

27 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

46 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

52 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

1 மணத்தியாலம் ago