வளைகுடாவில் பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் ஒரு மாதத்திற்குப் பிறகு தற்காலிகமாக ஓய்ந்துள்ள போதிலும், அப்பகுதியில் இன்னும் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானைச் சுற்றியுள்ள கடல் பகுதியை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளது. அதிபர் டிரம்ப் அறிவிப்பின்படி, ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், சீனாவின் ‘ரிச் ஸ்டாரி’ என்ற கப்பல் அமெரிக்காவின் தடையை மீறி ஜலசந்தியைக் கடந்துவிட்டதாக முதலில் தகவல்கள் பரவின. ஆனால், 2.5 லட்சம் பீப்பாய்கள் மெத்தனால் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல், அமெரிக்கக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் வளைகுடா பகுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டதை அமெரிக்க மத்திய கமாண்ட் (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது. தடையை மீற முயன்ற மேலும் 5 கப்பல்களும் ஈரான் துறைமுகங்களுக்கே திருப்பி விடப்பட்டுள்ளன.
அதே சமயம், ‘அலிசியா’ என்ற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல் மட்டும் ஜலசந்தி வழியாக வளைகுடாவுக்குள் நுழைய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அந்தக் கப்பல் ஈரானுக்குச் செல்லாமல், ஈராக்கில் எண்ணெய் ஏற்றுவதற்காகச் செல்வதால் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு வரை நாளொன்றுக்கு 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்த இந்தப் பாதையில், தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களே மிகுந்த அச்சத்துடன் பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி முற்றுகையாலும், சபாஹர் துறைமுகம் அருகே கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படுவதாலும் உலக சந்தையில் பெரும் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போர்ப் பதற்றம் காரணமாகக் கப்பல்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் கடுமையாக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையைப் பெருமளவில் உயர்த்தி, சர்வதேச பொருளாதாரத்தில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…