“ஷாக்… சீனா, ரஷ்யாவுக்கு செக் வைத்த ட்ரம்ப்…! ஈரானுக்கு உதவினால்… எச்சரித்த அமெரிக்கா…!!

Spread the love

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, எந்த சூழ்நிலையிலும் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ மாட்டேன் என சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி அளித்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேபோல, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்க மாட்டேன் எனத் தன்னிடம் கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இவ்விரு தலைவர்களின் வார்த்தைகளையும் தாம் நம்புவதாகக் கூறியுள்ளார்.

மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா நேரடியாக ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என்றும், நேட்டோ நாடுகளுக்கே விற்பதாகவும், அதை அவர்கள் எப்படி விநியோகிக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்பதையும் ரஷ்யா புரிந்து வைத்துள்ளதாக ட்ரம்ப் விளக்கியுள்ளார். ஈரான் விவகாரத்தில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு முக்கிய நாடுகளும் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்பது தனது கருத்து எனக் கூறியுள்ள அவர், “ஒருவேளை அவர்கள் ஈரானுக்கு உதவ முன்வந்தால், அது அவர்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்; நிச்சயம் அது அவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது” என்று இரு நாடுகளுக்கும் வெளிப்படையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு சீனாவும் ரஷ்யாவும் இலக்கு குறித்த உளவுத் தகவல்களையோ அல்லது தொழில்நுட்ப உதவிகளையோ வழங்கியிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்பட்டு வரும் சூழலில் ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. தற்போது போரின் அடுத்தகட்ட பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனா அல்லது ரஷ்யா போன்ற வல்லரசுகள் இதில் நேரடியாகத் தலையிட்டால் இது மிகப்பெரிய உலகளாவிய போராக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இருப்பினும், அத்தகைய சூழல் உருவாகக் கூடாது என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Swetha

Recent Posts

அடப்பாவி… தார் காரும் பைக்கும் வாங்கிட்டு வாடி?… நடுரோட்டில் மனைவியை கொடூரமாக மிதித்த கணவன்… லூதியானாவில் உறைக்க வைக்கும் பகீர் சம்பவம்…!

வரதட்சணையாக தார் காரும் அதிக திறன் கொண்ட பைக்கும் கேட்டு, லூதியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவியை நடுரோட்டில்…

10 minutes ago

ஐயோ கொடுமையே… பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துநர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்… நாசிக்கில் சிசிடிவியை உலுக்கிய கொடூர விபத்து…!

நாசிக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த 'சிட்டிடிங்க்' பேருந்து, சாலையிலிருந்த…

24 minutes ago

அதிர்ச்சி… நீதிபதி மகன் ஓட்டிய மெர்சிடீஸ் பென்ஸ் மோதி பயங்கரம்… 55 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலி… கொச்சியில் அதிகாலையில் நடந்த கொடூரம்…!

கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…

34 minutes ago

புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தை நோக்கி வரும் பேரிடர்… 16 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை….!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…

1 மணத்தியாலம் ago

‘ஆபரேஷன் D’ பின்னணியில் அமித்ஷா?…. தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?… மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு….!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…

1 மணத்தியாலம் ago

அமைச்சர்கள் காலில் விழுந்தாலும் இனி வேலை நடக்காது….. அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு…. பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…

1 மணத்தியாலம் ago