“எங்க வேலை முடிஞ்சது”… “2 வாரங்களில் போர் ஓயும்”… உலகையே அதிரவைத்த டிரம்பின் திடீர் அறிவிப்பு….!

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்த அதிரடித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் போர் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும், ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியாத நிலைக்குக் கொண்டு செல்வதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் விளக்கமளித்தார். ஈரானுடன் புதிய ஒப்பந்தங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு போரின் போக்கை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், உலகின் முக்கிய எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையைப் (Strait of Hormuz) பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அமெரிக்கா பின்வாங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நீரிணையைப் பாதுகாப்பது பிரான்ஸ் போன்ற அந்தப் பாதையைப் பயன்படுத்தும் நாடுகளின் பொறுப்பு என்றும், இதற்காக அமெரிக்கா தொடர்ந்து செலவிடத் தயாராக இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இந்தப் போரில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற தனது அதிருப்தியையும் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிய ஆட்சி தற்போது முறையாக நசுக்கப்பட்டு வருவதாகவும், ஈரான் முன்பை விட மிகவும் பலவீனமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானின் இராணுவக் கனவுகள் கலைக்கப்பட்டு வருவதாகவும், இஸ்ரேல் பிராந்தியத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி வருவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார். இருப்பினும், போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதையும், இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் செய்யாது என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தப் போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விவகாரமாகத் தோன்றினாலும், இதன் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, போர்ச் சூழலால் இந்தியாவுக்கான எல்.பி.ஜி (LPG) விநியோகம் சீர்குலைந்துள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. டிரம்ப் கூறுவது போல போர் சில வாரங்களில் முடிந்தாலும், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமும், ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களின் பாதிப்பும் சரியாகக் குறைந்தது ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால் இந்தியா இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

Nanthini

Recent Posts

முத்தம்.. கட்டியணைப்பு… ‘நைட் ஷிப்ட்’டில் பெண் போலீஸ் செய்த காரியம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி.. இணையத்தைக் கலக்கும் ‘ரொமான்ஸ்’ வீடியோ….!

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய காவல்துறையினரே, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ்’…

8 minutes ago

இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை?…. எம்.எல்.ஏ சீட்டுக்காக முட்டி மோதும் தவெக நிர்வாகிகள்… ஷாக்கில் முதல்வர் விஜய்….!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒருவழியாகப் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையிலும், அரசியல் களம் அதற்குள்ளாகவே அடுத்த பரபரப்பிற்குத் தயாராகிவிட்டது.…

14 minutes ago

“கணவனை தவிக்கவிட்டு கரீபியன் தீவுக்கு தப்பியோடிய மனைவி: வாடகைக்கு வந்தவனுடன் அரங்கேறிய விபரீதம்!”

அவந்திகா தன் கணவர் ரவியுடன் ஒரு சாதாரண, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். ரவி மொபைல் கடை நடத்தி வந்ததால்,…

15 minutes ago

“நெஞ்சு வலிக்குது…” – சோஃபாவில் அமர்ந்த சில நிமிடங்களில் நடந்த விபரீதம்… திரைக்கதை மன்னன் பாக்யராஜின் கடைசி நிமிடங்கள்….!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையும், 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படுபவருமான நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் (வயது…

20 minutes ago

“விபத்து அல்ல, பக்காவான ஸ்கெட்ச்”… புனே தொழிலதிபர் மரணத்தில் வருங்கால மனைவி செய்த கொடூரம்… ‘ட்விஸ்ட்’ மேல் ‘ட்விஸ்ட்’ கொடுக்கும் புனே வழக்கு….!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள லோகாத் கோட்டையில் தொழிலதிபர் கேதன் அகர்வால் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு…

27 minutes ago

பதறியடித்து ஓடிவந்த பார்த்திபன், பாண்டியராஜ்.. அப்போலோவில் நடந்தது என்ன?…. கண்ணீர் விட்டு கதறும் கோலிவுட்…. நாளை பாக்யராஜ் இறுதிச்சடங்கு….!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத்…

36 minutes ago