மத்திய கிழக்கு பகுதியில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பும், லெபனான் தலைநகர் பெய்ரூட் வரை இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ராணுவ நடவடிக்கை ஈரானுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியதோடு மட்டுமல்லாமல், எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நள்ளிரவில் கடுமையான வாக்குவாதமாக வெடித்துள்ளது. லெபனான் மீதான தாக்குதல்களால் உலக அளவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.
நெதன்யாகுவுடனான இந்த நள்ளிரவு உரையாடலின் போது டிரம்ப் மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறாய்” என்று சத்தமாகக் கேட்ட டிரம்ப், “நான் இல்லையென்றால் நீ இந்நேரம் சிறையில்தான் இருந்திருப்பாய், நான் தான் உன்னை காப்பாற்றி வருகிறேன்; ஆனால் இப்போது உன்னுடைய இந்த நடவடிக்கைகளால் உலக நாடுகள் அனைத்தும் உன்னையும், இஸ்ரேலையும் வெறுக்கத் துவங்கியுள்ளன” என்று நேரடியாகவே சாடியுள்ளார். மேலும், இஸ்ரேலின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்கைகள் நீடித்தால் சர்வதேச அரங்கில் அந்த நாடு முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த கடுமையான போன்காலைத் தொடர்ந்து, லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதால் எல்லையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வானிலேயே தடுத்து அழித்தாலும், வடக்கு இஸ்ரேல் பகுதியில் அவசர எச்சரிக்கை ஒலிகள் முழங்கி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின. இதற்கு பதிலளிக்கும் விதமாக நெதன்யாகு தனது எக்ஸ் (X) பக்கத்தில், “ஹிஸ்புல்லா அமைப்பு எங்கள் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீதான எங்கள் தாக்குதல் தொடருமே தவிர இந்த நிலைப்பாடு மாறாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இஸ்ரேலின் இந்த போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாப், இஸ்ரேல் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் முழுமையாக நிறுத்திக் கொள்வதோடு இஸ்ரேலுக்கு எதிராக உறுதியாக களமிறங்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த இருதரப்பு மோதல் தீவிரமடைந்தால், உலக அளவில் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சமும் தற்போது உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…