நடிகை த்ரிஷா மற்றும் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில், த்ரிஷா தனது திருமண வாழ்க்கை குறித்துப் பேசிய பழைய நேர்காணல் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. குறிப்பாக, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதாகவும், அதில் ஒரு நடிகையுடனான தொடர்பைக் குறிப்பிட்டிருப்பதாகவும் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்கு மத்தியில், த்ரிஷாவின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் வீட்டுத் திருமண விழாவில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிற உடையில் கலந்துகொண்டது இந்த சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியது.
திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது தெளிவான நிலைப்பாட்டை அந்தப் பேட்டியில் த்ரிஷா பதிவு செய்துள்ளார். “எனக்கு விவாகரத்து என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை; அதனால் திருமணத்திற்குப் பிறகு பிரிய வேண்டும் என்ற எண்ணமே எனக்குக் கிடையாது” என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தனக்கு கணவராக வரப்போகிறவர் ‘இவர்தான் நமக்கானவர்’ என்பதை மனதார உணர்ந்த பிறகுதான் திருமண முடிவை எடுப்பேன் என்றும், ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு நூறு முறை யோசித்து நிதானமாகவே செயல்படுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவரை காயப்படுத்தவோ அல்லது மகிழ்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கையை வாழவோ தான் விரும்பவில்லை என்று கூறியுள்ள த்ரிஷா, விவாகரத்து என்ற நிலைக்குத் தள்ளப்படாத ஒரு உறுதியான உறவையே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் விஜய் மற்றும் அவரது குடும்பம் சார்ந்த சர்ச்சைகளில் த்ரிஷாவின் பெயர் அடிபடும் வேளையில், “நிச்சயமாக விவாகரத்து செய்யமாட்டேன்” என்கிற அவரது பழைய கருத்துக்கள் இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…
பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…