சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று அண்மையில் வைரலானது. அந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர் ஒருவர், “தாலி கட்டுவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாகக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு விஜய் – த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்தப் சர்ச்சைக்குரிய பதிவிற்கு த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் ‘லைக்’ செய்துள்ளதாக ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இதனால், த்ரிஷாவின் தாயார் இந்தத் திருமணச் செய்தியை மறைமுகமாக உறுதிப்படுத்திவிட்டதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினர். இது விஜய் மற்றும் த்ரிஷாவின் திருமணக் கிசுகிசுக்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது.
இருப்பினும், அந்தப் பதிவின் ‘லைக்’ செய்தவர்கள் பட்டியலில் த்ரிஷாவின் தாயார் பெயர் தற்போது இடம்பெறவில்லை. இதனால் அந்த ஸ்கிரீன்ஷாட் உண்மையானதா? அல்லது யாராவது எடிட் செய்து வதந்தியைப் பரப்பினார்களா ? என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வராத நிலையில், இது வெறும் சமூக வலைத்தள வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…