டிரஸ் தவிர வேற எதுவுமே இல்ல.. இக்கட்டான சூழ்நிலையில் என் வாழ்க்கையை மாத்திட்டாரு.. மனம் திறந்து பேசிய தர்மதுரை புகழ் திருநங்கை..!!

By admin on புரட்டாதி 12, 2024

Spread the love

பிரபல இயக்குனரான சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 20 ஆம் தேதி கோழிப்பண்ணை செல்லதுரை படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது.

பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைத்த தர்மதுரை: திருநங்கை ஜீவா உருக்கம்

   

அந்த நிகழ்ச்சியில் பேசிய திருநங்கை ஜீவா கூறியதாவது, பேருக்கு ஏத்த மாதிரி சீனு ராமசாமி அண்ணன் ரொம்ப ஸ்வீட். அவரு இனிப்பான மனுஷன். இன்னைக்கு நான் வாழ்ந்து கிட்டு இருக்க அந்த வாழ்க்கை எனக்கு அவரு கொடுத்தது. இதை நான் எங்க வேணாலும் வந்து சொல்லுவேன். என் உடம்புல இருக்குற கடைசி சொட்டு ரத்தம் இருக்கிற வரைக்கும் எங்க அண்ணன் என் உடம்புல இருப்பாரு. இது அவர் கொடுத்த வாழ்க்கை தான். தர்மதுரை படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் நான் சென்னைக்கு வந்தேன்.

   

அம்மா மாதிரி நீயும் பேர் வாங்கிடாத.. ஆக்லெண்ட் திரைப்பட விழாவில் வெளியாகும்  'கோழிப்பண்ணை செல்லத்துரை' ட்ரெய்லர் வெளியீடு - Cinemapettai

 

அப்பதான் எனக்கு அண்ணனை பத்தி எல்லாமே தெரியும். அண்ணன் என்ன கூப்பிட்டு இந்த படத்துல எனக்கு ஒரு வேலை கொடுத்து இருக்காங்க. இந்த படத்துல நடிச்சு முடிச்சிருக்கேன். என்னோட அடையாளம் தர்மதுரை ஜீவா. இந்த படத்துலயும் அண்ணன் எனக்கு ஒரு சாங் கொடுத்திருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துல அண்ணன் திடீர்னு ஒரு நாள் எனக்கு கால் பண்ணி கூப்பிட்டாங்க.

புதுமுகங்களை இயக்குகிறார் சீனு ராமசாமி | seenu ramasamy to direct new faces  - hindutamil.in

தர்மதுரை படம் பண்ணும் போதும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். டிசம்பர் சென்னையில் வெள்ளம் வந்தபோது என்கிட்ட எதுவுமே இல்ல. என்கிட்ட போட்டுக்க டிரஸ் தவிர வேற எதுவுமே இல்ல. இந்த ஊரை விட்டு போகலாம்னு முடிவுல இருந்தேன். அப்புறம்தான் அண்ணன் என்னை கூப்பிட்டு நடிக்க வச்சாரு. அன்னைக்கு எனக்கு கொடுத்த வாய்ப்பு இன்னிக்கி இவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்கு. அதுக்கு ரொம்ப நன்றி என உருகமாக பேசி உள்ளார்.

Thalapathy Vijay Reply to Transgender Jeeva | tamil cinema news