பிக் பாஸ் சீசன் 6ல் நுழையும் ‘திருநங்கை’ போட்டியாளர்… யாருன்னு தெரியுமா உங்களுக்கு?…

By Begam

Published on:

பரபரப்புக்கும்  விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இதில் ஒரு திருநங்கை போட்டியாளர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 6வது சீசன் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் தொடர்பான விவரங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளன.

   

இந்த பிக் பாஸ் சீசன் 6 நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5ல் நமிதா என்ற திருநங்கை கலந்து கொண்டார். அதேபோல தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 ஷிவின் கணேசன் என்பவர் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி  உள்ளது.

திருநங்கை ஷிவின் கணேசன் மிகப் பிரபலமான மாடல் அழகி என்பதும்  குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் சீசன் 6ல் பங்கு பெரும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தகவல்கள் உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்பொழுது திருநங்கை ஷிவின் கணேசன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அவரின் புகைப்படம் உங்களுக்காக…