“அடேங்கப்பா…” மணிக்கு 350 கி.மீ வேகமா?… ஜஸ்ட் 73 நிமிஷம் தான்… தமிழ்நாட்டில் அமையப்போகும் 3 முக்கிய ஸ்டேஷன்… மத்திய அரசு வெளியிட்ட மெகா புல்லட் ரயில் திட்டம்…!

Spread the love

நாட்டின் மிக முக்கிய வணிக நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான ரயில் பயண நேரத்தை வெறும் 73 நிமிடங்களாகக் குறைக்கும் நோக்கில், புல்லட் ரயில் திட்டத்திற்கான 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் கழகத்தின் இந்த புதிய அறிவிப்பின்படி, ஒப்பந்ததாரர் திருத்தப்பட்ட வழித்தட வரைபடத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான ரயில் பயணம் சுமார் 7 மணி நேரமாக உள்ள நிலையில், மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த அதிவேக புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, ஒட்டுமொத்த பயண நேரமும் தலைகீழாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 306.2 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்ட இந்த வழித்தடம், நாட்டின் மூன்றாவது புல்லட் ரயில் திட்டமாக அமையவுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வழித்தடத்தில் மொத்தம் 8 ரயில் நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் தமிழகப் பகுதியில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி மற்றும் பரந்தூர் ஆகிய மூன்று நிலையங்கள் அமையவுள்ளன. குறிப்பாக, புதிய சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் பகுதி ‘வருங்கால நிலையம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது; அதாவது அங்கு விமான நிலையம் அமையும் பட்சத்தில் இந்த ரயில் நிலையப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள நிலையங்கள் வழக்கமான நிறுத்தங்களாகச் செயல்படும் இத்திட்டம், வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடிப்பதற்கான இலக்கைக் கொண்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெட்வொர்க்குடன் இணையும் வகையில், இதன் முதல் நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ நெட்வொர்க்குடன் 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் இணைப்புகள் மூலம் சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் உருவாக்கப்படும். சென்னை சென்ட்ரல் அருகே உள்ள 1.7 கி.மீ. சுரங்கப்பாதை உட்பட மொத்தம் மூன்று சுரங்கப்பாதைகள் இந்த வழித்தடத்தில் இடம்பெறவுள்ளன. மீதமுள்ள பகுதிகள் பெரம்பூர், கொளத்தூர், ICF, பாடி, பூந்தமல்லி மற்றும் அரக்கோணம் போன்ற முக்கிய இடங்களைக் கடந்து மேம்பால வழித்தடமாக (Elevated Corridor) அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை – அகமதாபாத் இடையேயும், இரண்டாவது திட்டம் மும்பை – புனே இடையேயும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவின் முதல் அதிவேக இணைப்பாக இந்த சென்னை – பெங்களூரு திட்டம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Visaka

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

33 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

37 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago