தொகுப்பாளினி அர்ச்சனா ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சிக்கு சென்ற இவர் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டு கல்யாணம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களிடம் இருந்து பல விமர்சனங்களை பெற்றார்.
இவர் இந்திய கடற்படையில் பணியாற்றும் தளபதி வினித் முத்துகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா என்று ஒரு மகள் உள்ளார் .புதிதாக ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க இருக்கிறார். இவருடன் அவரது மகளும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
தற்சமயம் தொகுப்பாளினி அர்ச்சனா தன்னுடைய மகளுடன் இணைந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சாரா கூறியதாவது ‘நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு ஃப்ரெண்ட்ஸே கிடையாது. என்னுடைய ஒரே ஒரு ஃப்ரெண்ட் என்னோட அம்மா மட்டும் தான்’ என்று அவர் மன வேதனைடன் கூறி இருந்தார் .
’15 வயதில் மீடியாவில் இருப்பதால் ஃப்ரெண்ட்ஸே கிடையாது என்பது மிகப்பெரிய கஷ்டமான விஷயம் தான். இந்த கஷ்டத்தை அவள் அனுபவத்திருக்கிறாள். நான் எப்பொழுதும் அவளுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டாக இருப்பேன் ‘என்று மகளிடம் அம்மா கூறியது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. அதோடு அவர்களுக்கு ரசிகர்கள் ஆறுதலும் கூறி வருகின்றனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…