சாலையா?… மரணக் குழியா?… கனமழையில் வெள்ளநீரில் மூழ்கிய… திறந்தவெளி வடிகாலில் விழுந்து… 12 வயது சிறுவன் பரிதாப பலி… உ . பி – யில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கிதாப்பூரில் பெய்த கனமழையால் சாலைகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் நடைபாதைக்கும் வடிகால் வாய்க்காலுக்கும் இடையேயான எல்லை தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வழியே நடந்து சென்ற 12 வயது சிறுவன் ஹம்மாத், நிலை தடுமாறி தண்ணீருக்கு அடியில் மறைந்திருந்த திறந்தவெளி வடிகாலில் தவறி விழுந்தான். திடீரெனச் சுழன்றடித்த பலத்த வெள்ளநீரில் அவன் உடனடியாக அடித்துச் செல்லப்பட்டான்.

இச்சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதிர்ச்சியடைந்து, சிறுவனைத் தீவிரமாகத் தேடும் பணியில் இறங்கினர். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடனடியாகக் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய வடிகால் குழாய்க்குள் சிறுவனின் உடல் சிக்கியிருப்பது கண்டெடுக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற மீட்ப்புக்குழுவினர் சடலத்தை மீட்டனர்.

https://twitter.com/itSachinverma/status/2108188945855176762/video/1

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மழைநீரில் மூழ்கிய பாதைகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததும், திறந்தவெளி வடிகால்களும் முடக்கப்பட்ட பாதுகாப்பற்ற சூழலுமே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாகும். ஒரு சிறுவனின் இன்னுயிரைக் பறித்த இந்தச் சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பொதுமக்களிடையே நகராட்சி நிர்வாகத்திற்கு எதிரான ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

8 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

8 minutes ago

BREAKING: அரசு பேருந்து பெரும் விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…

12 minutes ago

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

17 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

19 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

22 minutes ago