#image_title
2024 வருடம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடத்தில் மாயாஜால் தியேட்டரில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள் பட்டியலை பார்க்கலாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் தான் அதிக வசூலை இந்த வருடம் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ரஜினியின் வேட்டையன் மூன்றாம் இடமும் பிடித்து இருக்கின்றது. ரஜினியின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் இறுதியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிராகவும் கல்விக் கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கதக்களமாக கொண்டிருந்தன. இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கி இருந்த இப்படத்தில் ரஜினியுடன் மஞ்சுவாரியார், ராணா, துஷாரா விஜயன் மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அமிதாப்பச்சன் நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினியுடன் இப்படம் மூலம் இணைத்து இருந்தார்.
#image_title
மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள படம் மலையாளத்தில் தாண்டி பல இடங்களில் வெற்றித் கரமாக ஓடியது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகை இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம் தான் இது. இந்த படம் நான்காம் இடத்தில உள்ளது.
#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இது தனுஷின் ஐம்பதாவது படம். இதுவரை ராயன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
#image_title
புஷ்பா திரைப்படம் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர். திரைப்படம் வெறும் ஆறே நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த படம் ஆறாம் இடத்தில் உள்ளது.
#image_title
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கல்கி 2898 ad. இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். ஆக்சன் திரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ஏழாம் இடத்தில உள்ளது.
#image_title
தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க அவருக்கு தங்கையாக தமன்னா நடித்திருந்தார். மேலும் ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்க குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் சொந்த தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் எட்டாம் இடத்தில உள்ளது.
#image_title
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியானது அயலான் திரைப்படம். குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான படமாக ஓரளவு இருந்ததால் படம் ஓரளவு ஓடியது எனலாம். இந்த திரைப்படம் ஒன்பதாம் இடத்தில உள்ளது.
#image_title
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் பத்தாம் இடத்தில உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…