தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டு, நகை வாங்குவோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,860-க்கும், ஒரு சவரன் ரூ.111,920-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 08) அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் விலை ரூ.1.13 லட்சத்தைத் தாண்டியிருப்பது நடுத்தர வர்க்கத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று இருந்த விலையை விட ரூ.10 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக, வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…