Categories: சினிமா

அடேங்கப்பா.. இத்தனை கோடியா.. 49 வயதில் நடிகர் சூர்யா சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு..?

Spread the love

நடிகர் சூர்யா தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா, இன்று தன்னுடைய 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். சினிமாவில் பல வருடங்களாக கஷ்டப்பட்டு சாதித்து ஒரு முன்னணி இடத்தை பிடித்திருக்கின்றார். இன்று தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகின்றார்.

நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் பல விமர்சனங்களை சந்தித்தார். நடனம் வரவில்லை, வசனம் பேச தெரியவில்லை, ரொமான்ஸ் வரவில்லை என்று ஏகப்பட்ட விமர்சனங்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது ஒரு முன்னணி நடிகராக வளர்ந்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம் என்றால் அது நந்தா தான். பாலா இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்தது. அதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு முன்னணி நடிகராக வலம் வர தொடங்கிய சூர்யா தொடர்ந்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்கும் இவர் அகரம் என்ற பவுண்டேஷனை தொடங்கி அதன் ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றார்.

இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இடைத்தொடர்ந்து கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்த முடித்து இருக்கின்றார். இந்த படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கும் இவர் கமிட்டாகி இருக்கின்றார்.

இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி இவருக்கு மொத்தம் 200 கோடியில் இருந்து 300 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது. ஒரு படத்திற்கு மட்டும் 20 இருந்து 25 கோடி வரை சம்பளமாக பெறுகின்றார். மேலும் இவரிடம் ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரியஸ், 80 லட்சம் மதிப்பிற்கும் AUDI Q7,  60 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் எம் கிளாஸ் உள்ளிட்ட பலவகையான சொகுசு கார்கள் இருக்கின்றது. மேலும் தற்போது மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கின்றார். அந்த வீட்டின் மதிப்பு 70 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

8 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

8 மணத்தியாலங்கள் ago