“நீங்களே பேசி அனுப்பிடுங்க P.A”…. அமைச்சர்களை கதறவிட்ட தவெக மா.செ.க்கள்… கட்சி ஆபீஸில் நடு இரவில் நடந்த களேபரம்…!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சியில், முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக லயோலா மணியும், வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக சிவாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களைத் தொடர்ந்து, தவெகவின் மாவட்ட செயலாளர்கள் பலரும் தங்களுக்கும் வாரியப் பதவிகள் வழங்கக் கோரி, அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி. நிர்மல்குமார் ஆகியோரைச் சந்தித்து மனு அளிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக அமைச்சர்களின் அலுவலகங்களில் இதற்கான கூட்டமும் கோரிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.

மாவட்ட செயலாளர்கள் தங்களின் கோரிக்கை கடிதத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வாரியப் பதவிகளைக் குறிப்பிட்டு, அவற்றில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு வலியுறுத்துகின்றனர். இதற்காக விஜய் மக்கள் மன்றக் காலத்தில் ஆற்றிய பணிகளை ஒரு ஃபைலாகவும், தவெக கட்சி தொடங்கிய பின் செய்த பணிகளை மற்றொரு ஃபைலாகவும் தயார் செய்து அளித்து வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் கட்சிக்கும் தலைவருக்கும் உழைத்த தங்களுக்கு, வாரியப் பதவிகளைக் கேட்க முழு உரிமையும் தகுதியும் உள்ளது என்பதை அவர்கள் இதன்மூலம் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்குப் பதிலளிக்கும் அமைச்சர்கள், “நீங்கள் சொல்லித் தான் தலைவருக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை; கட்சியின் உழைப்பு அனைத்தும் தலைவருக்குத் தெரியும், உரிய நேரத்தில் அவர் செய்வார்” என்று கூறி அவர்களை அமைதிப்படுத்த முயல்கின்றனர். இருப்பினும், இந்த பதிலில் திருப்தியடையாத மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியுடன் வெளியேறுகின்றனர். இதற்கிடையே, வாரியப் பதவி கிடைக்காத பட்சத்தில், அரசு டெண்டர்கள் மற்றும் காண்ட்ராக்ட் வேலைகளைத் தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்குமாறு அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் இந்தத் தொடர் நெருக்கடிகளால் அமைச்சர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், தங்களின் தனிச் செயலாளர்களிடம் “யார் வந்தாலும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று முன்கூட்டியே விசாரியுங்கள்; வாரியப் பதவி, காண்ட்ராக்ட் கேட்டு வந்திருந்தால் மனுக்களைப் பெற்றுக்கொண்டு நீங்களே பேசிச் சமாளித்து அனுப்பி வையுங்கள், அனைவரையும் உள்ளே விட்டு என்னை டென்ஷன் ஆக்காதீர்கள்” என்று கடுமையான உத்தரவை அமைச்சர்கள் பிறப்பித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

திரும்பிப் போகவும் வழியில்லை… வாழவும் வழியில்லை..! நடுரோட்டில் தவிக்கும் இளம்பெண்ணின் கதறல்… வைரலாகும் வீடியோ பதிவு…!!

சத்தார்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.…

8 minutes ago

தவறு இருந்தால் FIR போடு… அடிக்க நீ யார்…? லாரி ஓட்டுநரை கைமுட்டியால் தாக்கிய ஓட்டுநர்… ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரம்…. இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…

16 minutes ago

“மாந்திரீக பயிற்சி…” கணவரின் கொன்று குடலை எடுத்து பையில் போட்ட பெண்…. நேரில் பார்த்து மிரண்ட ஓனர்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…

26 minutes ago

ஆம்புலன்சில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் டியூப்… நெஞ்சு வலியால் துடித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…

37 minutes ago

குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்த பெண்… இரவு 10 மணிக்கு அரங்கேறிய  கொடூரம்… காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பகீர் சம்பவம்…!!

தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…

49 minutes ago

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

1 மணத்தியாலம் ago