தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி வெளியான ‘TN 2026’ திரைப்படம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வெளியான மூன்று நாட்களில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ள இப்படம், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை நையாண்டி செய்யும் விதமாக பல காட்சிகள் அமைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் நகர்வுகளைச் சாடும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
இப்படத்தில் விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு மற்றும் அதில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய முத்தக் காட்சியை நேரடியாகக் கிண்டல் செய்துள்ளதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். திரைக்கதையில் காரைக்குடி படப்பிடிப்பு எப்படி திடீரென காஷ்மீருக்கு மாறியது என்று நட்டியின் மனைவி கேட்பது போலவும், நடிகையுடன் லிப்லாக் காட்சி தேவையா என அவர் சண்டையிடுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது லியோ படத்தில் விஜய் – திரிஷா இடையே இடம்பெற்ற காட்சிகளை அப்பட்டமாக அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாகக் கூறி, தியேட்டர் கிளிப்பிங்ஸை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் படக்குழுவினரைச் சாடி வருகின்றனர்.
விஜய் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, நிலைமையைச் சமாளிக்க உமாபதி ராமையா மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரும் அவசர அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். சில இடங்களில் விஜய்க்கு ‘மாஸ் பில்டப்’ கொடுத்திருந்தாலும், பர்சனல் விஷயங்களில் அவரைத் தரக்குறைவாகச் சித்தரித்துள்ளதாகக் கிளம்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், பெரிய நடிகர்களை வம்புக்கு இழுத்துத் திரைப்படம் விளம்பரம் தேடிக்கொள்வதாகத் திரை விமர்சகர்களும் ரசிகர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…