கழன்றது சைக்கிள்.. கைகொடுக்குமா தாமரை?… ஒரே முடிவால் காலி ஆன கட்சி பதவி… ஜி.கே.வாசன் எடுத்த அந்த ஒரு முடிவு… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

Spread the love

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

மேலும் ஜி.கே. வாசனின் இந்த தன்னிச்சையான முடிவானது கட்சியின் தனித்துவத்தை சிதைப்பதாகவும், காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோரின் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகவும் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் பலர் கூட்டாக விலகியிருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உட்கட்சி மோதல் காரணமாக, தேர்தல் நெருங்கும் வேளையில் தமாகா பலவீனமடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ‘சைக்கிள்’ சின்னம் அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணி கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த விலகல் படலம் ஒருபுறம் இருக்க, ஜி.கே. வாசன் தனது முடிவில் உறுதியாக இருப்பதால், வரும் நாட்களில் மேலும் பல நிர்வாகிகள் வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது, இது தமாகா வட்டாரத்தில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Rajeshwari

Recent Posts

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

3 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

7 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

11 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

12 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

14 minutes ago

“திமுகவை திட்ட மாட்டேன்”…. மேடையிலேயே போட்டுடைத்த கமல்… பதறிய அரசியல் களம்…!

சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…

16 minutes ago