வருகிற ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படமும் 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாவது கடும் போட்டியாக இருக்கும். திட்டமிட்டே இப்படி பராசக்தி படம் ஜனநாயகன் படத்துடன் மோதுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, ஜனநாயகன் படம் தீபாவளிக்கே ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால் ஜனவரியில் ரிலீஸ் செய்தால்தான் வியாபாரம் நன்றாக இருக்கும் என நினைத்தார்கள்.
ஆனால் பராசக்தி படம் பூஜை போடப்பட்ட நாளிலேயே பொங்கல் ரிலீஸ் என்று சொல்லிவிட்டார்கள். அடுத்தடுத்த நாட்களில் ஜனநாயகன் படமும் பராசக்தி படமும் வெளிவருவது போட்டிக்காக செய்யவில்லை. பராசக்தி படத்தை பொறுத்தவரை தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் 14ம் தேதி ரிலீஸ் செய்தால் 6 முதல் 7 ஏழு நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஜனநாயகன் பெரிய ஹிட் ஆகும் என்றுதான் நினைக்கிறோம். 2 வாரங்கள் அந்த படத்தை திரையிடுவோம். நீங்கள் 26ம் தேதி வரவேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்களோ நாங்கள் இந்த தேதியை பிளான் செய்துதான் வியாபாரம் எல்லாம் செய்து விட்டோம். 10ம் தேதியே வருகிறோம் என்று சொல்லி தான் வருகிறார்கள். நிச்சயம் போட்டிக்கு வரவில்லை என்று திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…