திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதிய வேளையில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தது. தீ மளமளவென பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்களும், அங்கிருந்த பொதுமக்களும் தங்களின் உயிரைக் காத்துக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்புத் துறையினரின் துரிதமான நடவடிக்கையால் தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டு, ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…