‘கனா காணும் காலங்கள்’ சீரியல் நடிகர் யுதன் பாலாஜியா இவர்?… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!…

‘கனா காணும் காலங்கள்’ சீரியல் நடிகர் யுதன் பாலாஜியா இவர்?… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!…

‘கனா காணும் காலங்கள்’ சீரியல் நடித்த நடிகர் யுதன் பாலாஜியின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பேமஸ் சீரியல் ‘கனா காணும் காலங்கள்’ இதன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகர் பாலாஜி. அதன் பின்னர் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

2006 முதல் 2009 வரை ஒளிபரப்பான இந்த தொடர் பள்ளி பருவ வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்தொடரில் நடித்த நடிகர்கள் பலரும் தற்பொழுது பிரபலங்களாக வலம் வருகின்றனர். அவ்வாறு ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஒருவர்தான் நடிகர் பாலாஜி.

இவர் 2016ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக  2018 ல் விவாகரத்து பெற்றனர். இவர் தற்பொழுது தமிழ்நாட்டின் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவர் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்பொழுது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் யுதன் பாலாஜியா இவர்?’ என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்….

Begam