கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகம் மொத்தமாக முடங்கிப் போய்விட்டதாக விமர்சிக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் சத்தமே இல்லாமல் அடுத்த கட்ட நடவடிக்கை நோக்கி கட்சி தலைவர் விஜய் நகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழக வெற்றி கழகம் கட்சி தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்ட செய்தி பெரிய அளவில் பேசும் பொருளானது. ஆனால் அதற்கான அடிப்படை காரணமே வேறு என்ற விவரம் அறிந்தவர்கள் ஏராளம். இப்படியான சூழலில் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் ஆணையத்தை விஜய் நாடியுள்ளார்.
அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொது சின்னத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் வெளியானது. பாக்கு சதவீதம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அப்படியே இருக்கும். தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும். இப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகள் விரும்பும் சின்னம் நிரந்தரமாக வழங்கப்படும்.
அந்த வரிசையில் தான் திமுகவுக்கு உதயசூரியனும் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னமும் உள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தில் அதற்கான விண்ணப்பங்களை தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு சில சின்னங்களை கேட்டு பரிந்துரை பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விசில், கால்பந்து, பேட், வெற்றி கோப்பை, சிலிண்டர், லேப்டாப் மற்றும் பேனா நிப்பு உள்ளிட்ட சின்னங்களை கேட்டு விஜய் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…