2026 தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்தும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்று கூறிய அவர், பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது நோட்டாவுக்கு வாக்களிப்பதற்கு சமம் என விமர்சித்தார்.
மேலும் தற்போதைய அரசியல் சூழலில், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்கப்போகிறோம் என்று நடிகர் விஜய்யைத் தவிர வேறு எவராலும் துணிச்சலாகக் கூற முடியவில்லை என்று அவர் புகழாரம் சூட்டினார். விஜய்யின் அரசியல் வருகை தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தனித்துப் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “ஊழலற்ற நிர்வாகம்” என்ற விஜய்யின் முழக்கம் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும், வரவிருக்கும் தேர்தலில் தவெக மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவரது பேச்சு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…