தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. தற்பொழுது வரை 600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறா.ர் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தனது தந்தையின் மூலம் சினிமா துறையில் கால் பதித்த நடிகர் விஜய், தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இவரின் மகனான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக களமிறங்காமல் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
இவர் இயக்குனர்களுக்கான பட்டப் படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை கூட நேற்று சத்தமில்லாமல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இப்படி நடிகர் விஜயின் திரை வாழ்க்கையும் , குடும்ப வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் விஜய் சங்கீதா பிரிந்து விட்டனர் என்ற செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜயின் அம்மா ஷோபா அவர்கள் பேட்டி ஒன்றில் தளபதி விஜய் சங்கீதா இருவரின் திருமணம் எப்படி நடைபெற்றது என்பதை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியுளளதாவது, ‘ லண்டனிலிருந்து ஏதேச்சையாக வந்த சங்கீதா விஜயை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றார். விஜய் வீட்டுல போயி அம்மா அப்பாவை பாருங்க’ என கூற, வீட்டிற்கு சென்ற சங்கீதாவை விஜயின் அப்பாவிற்கு பிடித்து விட, விஜய்க்கு சங்கீதாவை திருமணம் முடித்து வைத்துள்ளனர். இது கடவுளின் சித்தம் தான்’ என்றும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…
https://www.youtube.com/shorts/8ykSNd55b-0