#image_title
வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்து 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொல்லாதவன்’. இப்படத்தில் திவ்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், முரளி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் பைசைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொல்லாதவன் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த படத்தின் மூலம்தான்வெற்றிமாறன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை அவரே எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் வளரும் ஒரு சாதாரண இளைஞன் பல்சர் பைக் வாங்க வேண்டும் என்ற கனவோடு பயணிக்கிறான். பைக் வாங்குவதற்காகவே வேலைக்கு செல்கிறான். ஆசை ஆசையாய் பைக்கை வாங்குகிறான். பைக்கை வாங்கிய பிறகு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல நினைக்கும் நாயகனின் பைக்கை ஒரு கும்பல் திருடி விடுகிறது. அதற்கு பிறகு நாயகன் இந்த பைக்கை எப்படி கண்டுபிடிக்கிறார் என்ன ஆனார் பைக் என்ன ஆனது என்பதே படத்தின் கதை சுற்றி வருகிறது.
பொல்லாதவன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்தது. இந்த படம் வெளிவந்த பிறகு பஜாஜ் பல்சர் பைக் மிகவும் பிரபலமானது. பெரும்பாலான இளைஞர்கள் அந்த பைக்கையே வாங்கினர். இந்த படம் வெற்றி அடைந்ததால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகை திவ்யாவிற்கு பதிலாக காஜல் அகர்வால் தான் நடிக்க இருந்தாராம். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க இயலவில்லையாம். படம் வெற்றி அடைந்த பிறகு, இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்று ஒரு நேர்காணலில் காஜல் அகர்வால் வருத்தமாக பேசி இருக்கிறார். இதோ பொல்லாதவன் படத்துக்காக எடுக்கப்பட்ட தனுஷ்-காஜல் அகர்வாலின் ஒத்திகை புகைப்படங்கள்.
#image_title
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…