#image_title
தமிழ் சினிமாவில் கிராமத்து நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ராமராஜன். ராமராஜன் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். இவரின் இயற்பெயர் ஆர். எம். குமரேசன் என்பதாகும். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தார் ராமராஜன்.
1977 ஆம் ஆண்டு முதல் சிறிய வேடங்களில் படங்களில் நடித்து வந்த ராமராஜனுக்கு படம் இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக 1985 ஆம் ஆண்டு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். 1986 ஆம் ஆண்டு வெளியான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கிராமம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ராமராஜன் பளிச்சென்ற வண்ணமயமான சட்டைகளை அணிவதன் மூலம் பிரபலமானார். 1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. 100 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடி வசூல் சாதனை படைத்தது.. ஒரு சில தியேட்டர்களில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
அடுத்தடுத்து ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘பாட்டுக்கு நான் அடிமை’ போன்ற படங்களில் மூலம் பற்றி தொட்டியெங்கும் பிரபலமானார் ராமராஜன். கிராமங்களில் எல்லாம் ராமராஜன் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
இவர் பிரபலமானதுக்கு மற்றொரு காரணம், இவர் நடிக்கும் படங்களில் சிகரெட் பிடிப்பது. மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருந்ததால் இவரின் மீது மக்களுக்கு மரியாதை ஏற்பட்டது. 80களில் பிற்பகுதியில் உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு இணையாக புகழின் உச்சியில் இருந்தார் ராமராஜன். 1987 ஆம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராமராஜன். பின்னர் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
2000களின் ஆரம்பத்தில் ராமராஜனின் மார்க்கெட் சரிந்தது. அவரின் படங்கள் சரியாக எடுபடவில்லை. அதனால் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்துக்கொண்ட ராமராஜன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த வருடம் ‘சாமானியன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ராமராஜன் ,நளினியுடன் ஆன விவாகரத்தை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், திருமணத்துக்கு பிறகு நளினி திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று நான் கூறினேன். எனது அப்பா அம்மாவும் அவரை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சத்தியம் செய்ய சொன்னார்கள். அதற்கு நளினியும் ஒப்புக்கொண்டு சத்தியம் செய்தார். ஆனால் சில காலத்துக்கு பிறகு அந்த சத்தியத்தை மீறிவிட்டார் நளினி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று ஓப்பனாக பகிர்ந்துள்ளார் ராமராஜன்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…