சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 5 நிமிட காணொளி மூலமாக உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். அந்த வீடியோவில், டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உள்ளது. இந்த கூட்டம் வெறும் நிர்வாக நிகழ்வு கிடையாது. இது உண்மையான பாமகவின் மறுபிறப்பு.
இது குடும்ப சண்டை கிடையாது, பதவிக்கான போர் அல்ல, நாம் எல்லோரும் சேர்ந்து உழைத்து உருவாக்கிய இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றக்கூடிய போராட்டம். ஒரு காலத்தில் 20 எம்எல்ஏக்கள் இருந்த பாமக என்று அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது. இப்படியான சூழலில் சேலத்தில் கூடும் பொதுக்குழு பாமகவின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு பெற்ற இழந்த அங்கீகாரத்தையும் கட்சியின் சின்னத்தையும் மீட்டெடுக்க போகும் பயணத்தின் முதல் படி. இது என்னுடைய கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால் என் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் இந்த இயக்கத்திற்காகவும் என் மக்களுக்காகவும் நான் போராடுவேன். சேலத்தில் பொதுக்குழுவில் கலந்துகொண்டு உண்மையோடு முனைப்போடும் உண்மையான பாமக ஓடும் இருக்க ஒவ்வொரு தொண்டரும் முன் வர வேண்டும் என்று ராமதாஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…