#BIG NEWS : தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி…. சற்றுமுன் கசிந்த தகவல்… அதிர்ச்சியில் ஆளுங்கட்சி….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்ற வி.சாலை அமைந்துள்ள விக்கிரவாண்டி தொகுதியையே அவர் தனது முதல் தேர்வாக வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், மாநாடு நடத்திய இடத்திலேயே அவர் தனது தேர்தல் பயணத்தைத் தொடங்க விரும்புவதும், அங்கிருக்கும் 100 அடி உயரக் கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு கட்சியின் வரலாற்றுச் சின்னமாக மாறியிருப்பதுமே ஆகும். மேலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தத் தொகுதி, மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் சென்று வர ஏதுவான போக்குவரத்து வசதியைக் கொண்டிருப்பதும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

விக்கிரவாண்டி தவிர, ஆங்கில எழுத்தான ‘V’ இல் தொடங்கும் வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளும் ஆலோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கிராமப்புறங்கள் நிறைந்த விக்கிரவாண்டி தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ள நிலையில், அங்கு போட்டியிடுவது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என தவெக தரப்பில் நம்பப்படுகிறது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வரும் வேளையில், கட்சியின் முதல்வர் வேட்பாளரான விஜய் விக்கிரவாண்டியைத் தேர்வு செய்தால், அது கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேட்பாளர் தேர்விற்குப் பிறகு வெளியாகும் எனத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“அமைச்சர் பதவிக்கு தகுதி இருக்கா?”… “அழுகினி நாடகம் ஆடுறாங்க”… தவெக அமைச்சரை வெளுத்து வாங்கிய திமுக… தூள் பறக்கும் ட்விட்டர் வார்…!

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…

11 minutes ago

அதிமுக காலி ஆகிறதா?… தவெக-வில் குவியும் மாஜிக்கள்… எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…

21 minutes ago

பனையூரில் குவிந்த முன்னாள் MLA-க்கள்… எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ரவி மரியா… மொத்தமாக சரிந்த அதிமுக கூடாரம்….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…

23 minutes ago

BIG BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்… ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…

27 minutes ago

விஜய் ஆட்சியில் ஊழலா?…. ஆளுநரிடம் ஓடிச் சென்ற நயினார் நாகேந்திரன்… பதற்றத்தில் தவெக வட்டாரம்… விஜய்க்கு வந்த புதிய சிக்கல்….!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…

31 minutes ago

FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…

34 minutes ago