கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் “தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு” மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் மாநாட்டுத் திடலில் குவியத் தொடங்கினர். மாநாட்டின் போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் தீபம் ஏந்தியபடி அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் பாதையில் நடந்து சென்றார். அப்போது அவரைக் காண்பதற்காகவும் பின்தொடர்வதற்காகவும் ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில் ரேம்ப் மீது ஏறியதால் அங்கு திடீர் முண்டியடிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த மாநாட்டில் மொத்தம் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் விசிக ஓர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், எதிர்காலத்தில் விசிக வெறும் கூட்டணி கட்சியாக மட்டுமே சுருங்கிவிடாமல், தமிழகத்தை ஆளும் முதன்மை அரசியல் சக்தியாக வளர வேண்டும் என்று தொண்டர்களிடையே வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், தமிழகத்தில் ஆளும் தவெக அரசுடன் இணைந்து விசிக தொடர்ந்து பயணிக்கும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
மாநாட்டுத் திடலிலும் மேடையிலும் வழக்கத்தை விட அதிகமான அளவில் கூட்டம் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தின் காரணமாக, தொண்டர்களிடையே சில நிமிடங்கள் மட்டுமே பேசிய திருமாவளவன், நிலைமையைக் கருத்தில் கொண்டு தனது பேச்சைச் சுருக்கமாக பாதியிலேயே முடித்துக் கொண்டார்.
பேச்சை முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்க முயன்றபோது, மேடையில் இருந்த கூட்ட நெரிசலில் திருமாவளவன் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக்கொண்டார். இதனால் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவருக்கு தண்ணீர் வழங்கி, ஓய்வெடுக்க உதவி செய்தனர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தலைவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…
மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…
விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யா, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று…
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…
கர்நாடக மாநிலம் மடிக்கேரி - பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார்…