அமைச்சரவையில் பங்கா?… இனியும் நம்ப முடியாது… திருமாவளவனின் ‘பஞ்சாயத்து’ பேச்சால் அப்செட்டான விஜய்…. பரபரக்கும் தமிழக அரசியல்…!

Spread the love

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் அண்மைக்கால அரசியல் கருத்துக்கள் மற்றும் நகர்வுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, “அமைச்சரவையில் பங்கு; அதேநேரம் திமுகவுடனும் நட்பு” என்ற அவரது புதிய யுக்தி, தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமொரு நிலைப்பாட்டை எடுத்து வரும் திருமாவளவனின் இந்த முரண்பட்ட பேச்சுகள் காரணமாக, அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக முதல்வர் விஜய் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

திருமாவளவனின் இந்தத் தொடர் முரண்பாடுகள் தவெக மட்டுமின்றி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடையேயும், விசிகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் கூட பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் ஜெகதீஸ் ஆகியோருடனான ஆலோசனையின் போது, “நமது ஆட்சியில் பங்கும் வேண்டும், திமுகவுடனும் நட்பாக இருப்போம் என்று கூறுவது என்ன மாதிரியான அரசியல்? திருமாவின் அண்மைக்கால பேச்சுகள் சரியாக இல்லை” என்று விஜய் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணியில் இருந்துகொண்டு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும், விருப்பமில்லையெனில் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு வெளியேறலாம் என்றும் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்ட பிறகும் திருமா ஏன் இப்படிச் செய்கிறார் என்ற எரிச்சலும் தவெக தரப்பில் எழுந்துள்ளது.

திமுகவுடனான உறவு ஒருபுறமிருக்க, அண்மையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதைச் சுட்டிக்காட்டி, பாஜகவுடனும் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதை திருமாவளவன் வெளிப்படுத்தியுள்ளார். திமுகவுடனான நட்பையே ரசிக்காத முதல்வர் விஜய், தற்போது திருமா பாஜகவுடனான நெருக்கத்தை மறைமுகமாக உணர்த்துவதையும் சற்றும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், “திருமா மீதிருந்த நம்பகத்தன்மை எனக்குக் குறைந்து கொண்டே வருகிறது” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் முதல்வர் விஜய் தனது வருத்தத்தை மிகவும் அழுத்தமாகப் பகிர்ந்துள்ளார்.

திருமாவளவனை தவெக கூட்டணிக்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, முதல்வரின் இந்த திடீர் அதிருப்தி பெரும் கவலையை அளித்துள்ளது. தவெக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த விரிசலையும், முதல்வர் விஜயின் கடுமையான வருத்தத்தையும் விசிக தரப்புக்கு உணர்த்தும் நோக்கில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்துள்ளார். அடுத்தடுத்து மாறும் திருமாவின் அரசியல் நிலைப்பாடுகளால் தவெக – விசிக கூட்டணியில் தற்போது பலத்த அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago