மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி நடந்த கோர விபத்தில், இரு வேறு வாகனங்களில் பயணித்த கல்லூரி மாணவர் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் – சோழவந்தான் சாலையைச் சேர்ந்த சரவண கணேஷ் என்பவர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக தனது நண்பர் பிரதீப் உடன் எஸ்.ஆர். ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அதே வேளையில், தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியின் குடும்பத்தினர், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தங்களது இளைய மகன் ஆதித்யாவை (19) கல்லூரியில் விடுவதற்காக தாய் சொர்ணலட்சுமி மற்றும் மூத்த சகோதரர் மூர்த்தியுடன் (21) காரில் ஈரோடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மதுரை விமான நிலைய சாலை, சொக்கநாதன்பட்டி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்றுள்ளது. நிலைகுலைந்த ஆம்புலன்ஸ், சாலையின் தடுப்புச்சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த காரின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்ஸில் பயணித்த சரவண கணேஷ், அவரது நண்பர் பிரதீப் மற்றும் காரில் சென்ற கல்லூரி மாணவர் ஆதித்யா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காரில் பயணித்த சொர்ணலட்சுமி மற்றும் மூர்த்தி ஆகிய இருவர் பலத்த காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் நகர காவல்துறையினர், விபத்தின் தீவிர காரணம் மற்றும் ஆம்புலன்ஸின் வேகம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…